தெற்காசிய கால்பந்து சம்மேளனம் சார்பில் 18 வயதிற்குட்பட்டோருக்கான கால்பந்து தொடர் நேபாள் தலைநகர் காத்மண்டுவில் நடைபெற்று வருகிறது. இதில், வங்கதேசம், இலங்கை அணிகளுடன் இந்தியா குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ளது. இந்தத் தொடரில், இந்தியா - வங்கதேச அணிகளுக்கிடையிலான போட்டி கோலின்றி டிராவில் முடிந்தது. இதைத்தொடர்ந்து, இன்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி, இலங்கை அணியை சந்தித்தது.
#SAFFU18: மாலத்தீவு ரெடியா இருக்கிங்களா... அரையிறுதியில் மாலத்தீவுடன் மோதும் இந்தியா - தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்
18 வயது உட்பட்டோருக்கான தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி, அரையிறுதிப் போட்டியில் மாலத்தீவு அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
முதல் பாதியில் இரு அணி வீரர்களும் அட்டாக்கிங் முறையில் விளையாடியும் கோல் அடிக்க முடியாமல் போனது. பின்னர், தொடர்ந்த இரண்டாம் பாதியில் இந்திய வீரர் குர்கீரத் சிங் 65ஆவது நிமிடத்தில் கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். ஆட்டம் முடிகின்ற தருணத்தில், மீண்டும் குர்கீரத் சிங், அமன் சேத்ரி கோல் அடித்ததால், இந்திய அணி 3-0 என்ற கணக்கில் இப்போட்டியில் வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின்மூலம், இந்திய அணி நான்கு புள்ளிகளுடன் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இதைத்தொடர்ந்து, நாளை மறுநாள் நடைபெறவுள்ள அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி, மாலத்தீவு அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.