தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

கால்பந்து பிரபலத்தின் தடைக்காலம் குறைப்பு... உற்சாகத்தில் ரசிகர்கள்! - விளையாட்டு நடுவர் நீதிமன்றம்

உலகின் நட்சத்திர கால்பந்து வீரரான நெய்மருக்கு சாம்பியன்ஸ் லீக்கின் பங்கேற்பதற்கான தடையை இரண்டு போட்டிகளாக குறைத்து விளையாட்டு நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

neymar jr

By

Published : Sep 18, 2019, 11:22 AM IST

I

உலகின் முன்னணி கால்பந்து வீரரும் செயின்ட் ஜெர்மன்ஸ் அணியின் நட்சத்திர வீரருமான நெய்மர் மான்செஸ்டர் - செயின்ட் ஜெர்மன் அணிக்கு இடையேயான போட்டி முடிவுக்குப் பின் தனது சமூக வலைதளத்தில் போட்டி ஏற்பாட்டாளர்களைக் கடுமையாக விமர்சித்தார்.

இதனால் ஆவேசமடைந்த போட்டி ஏற்பாட்டாளர்கள் நிர்வாகம் நெய்மருக்கு மூன்று சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் விளையாட தடைவிதித்தது. அதனைத்தொடர்ந்து விளையாட்டு நடுவர் நீதிமன்றத்தை அணுகிய நெய்மர் தன் மீதான தடைகுறித்து மேல் முறையீடு செய்தார்.

இந்த மேல்முறையீட்டை விசாரணை செய்த நடுவர் நீதிமன்றம் நெய்மரின் மூன்று போட்டிக்கான தடையை இரண்டு போட்டிகளாக குறைத்துள்ளது. நெய்மரின் தடைக்காலம் குறைக்கப்பட்டுள்ளதால் அவரின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details