லா லிகா தொடரின் டிபெண்டிங் சாம்பியன் அணியான பார்சிலோனா அணியை எதிர்த்து கிரனடா அணி விளையாடியது. இந்தப் போட்டிக்கு முன்னதாக பார்சிலோனா அணியின் புதிய பயிற்சியாளராக குயிக் செட்டியன் நியமிக்கப்பட்டதால், புதிய பயிற்சியாளருக்கு முதல் போட்டி எவ்வாறு அமையும் என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இந்த ஆட்டத்தின் தொடக்கம் முதலே பார்சிலோனா அணியின் கைகள் ஓங்கியே இருந்தது. அதிகபடியான பாஸ்கள் செய்த பார்சிலோனா அணி, கிரனடா அணியினரின் தடுப்பாட்டத்தை மட்டும் கடந்து கோல்கள் போட முடியவில்லை. கிரனடா அணியால் பார்சிலோனா அணியின் ஆட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியாததால், கோல் அடிக்கும் வாய்ப்புகள் கிடைக்காமலே இருந்தது. இரு அணிகளும் கோல்கள் எதுவும் அடிக்காத நிலையில், முதல் பாதி முடிவுக்கு வந்தது.