ஒவ்வொரு ஆண்டும் ஐரோப்பா சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில், சிறந்த கோல் அடிப்பதற்கான விருது வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், 2018ஆம் ஆண்டுக்கான சிறந்த கோல் அடித்த வீரர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. அதில், பார்சிலோனா அணியின் கேப்டன் மெஸ்ஸி, யுவென்டஸ் வீரர் ரொனால்டோ ஆகியோருக்கு இடையே தான் வழக்கம்போல் கடும் போட்டி நிலவியது.
இந்தத் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் பார்சிலோனா அணி 3-0 என்ற கணக்கில் லீவர்பூல் அணியை வீழ்த்தியது. இதில், மெஸ்ஸி அடித்த ஃப்ரீகிக் முறையில் அடித்த மிரட்டலான கோல்தான் இந்த சீசனின் சிறந்த கோல் என தேர்வுசெய்யப்பட்டுள்ளது.