உலகின் முன்னணி நட்சத்திர கால்பந்து வீரரும், பார்சிலோனா அணியின் கேப்டனுமாக திகழ்பவர் லியோனல் மெஸ்ஸி. நேற்று முன்தினம் (ஜனவரி 18) நடைபெற்ற ஸ்பானிஷ் சூப்பர் கோப்பை இறுதி போட்டியில் பார்சிலோனா அணி - அத்லெடிகோ பில்பாவோ அணியுடன் மோதியது.
இப்போட்டியில் அத்லெடிக் பில்பாவோ அணி 3-2 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இப்போட்டியின் இறுதி நிமிடத்தின் போது பார்சிலோனா அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி எதிரணியின் ஆசியர் வில்லலிப்ரேவை தாக்கினார். இதனையடுத்து மெஸ்ஸிக்கு களநடுவர் ரெட் கார்டு வழங்கினார்.
அதேசமயம் பார்சிலோனா அணிக்காக 2001ஆம் ஆண்டு முதல் விளையாடி வரும் லியோனல் மெஸ்ஸி, முதல் முறையாக கள நடுவரிடம் ரெட் கார்டினை பெற்றது ஆவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.