உருகுவே கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான லூயிஸ் சுவாரஸ், லாலிகா கால்பந்து லீக் தொடரில் அத்லெடிகோ மாட்ரிட் அணிக்காக விளையாடிவந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 17ஆம் தேதி சுவாரஸ் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவர் கரோனா தொற்றிலிருந்து மீண்டு, தற்போது பயிற்சிக்குத் திரும்பவுள்ளதாகத் தகவல் வெளியானது. இத்தகவலை அத்லெடிகோ மாட்ரிட் அணியும் உறுதிசெய்துள்ளது.