தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

சாம்பியன்ஸ் லீக் தொடரில் சாதனை படைத்த லிவர்பூல்! - சாம்பியன்ஸ் லீக் தொடரில் சாதனை படைத்த லிவர்பூல்

சாம்பியன் லீக் கால்பந்து தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் லிவர்பூல் அணி 2-0 என்ற கோல் கணக்கில் மிட்ஜில்லேண்ட் எஃப்சி அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.

Liverpool scores 10,000th goal in 2-0 win over Midtjylland
Liverpool scores 10,000th goal in 2-0 win over Midtjylland

By

Published : Oct 28, 2020, 5:50 PM IST

ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பினால் நடத்தப்பட்டு வரும் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று (அக். 28) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் லிவர்பூல் அணி, மிட்ஜில்லேண்ட் எஃப்சி அணியுடன் மோதியது.

பரபரப்பான இந்த ஆட்டத்தின் தொடக்கம் முதலே இரு அணிகளும் கடுமையாகப் போராடியது. இதனால் முதல் பாதி ஆட்டநேரம் முடிவில் இரு அணிகளும் கோலேதுமின்றி சமநிலையில் இருந்தது.

இதைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில் திறனை வெளிப்படுத்த தொடங்கிய லிவர்பூல் அணியின் டியாகோ ஜொடா ஆட்டத்தின் 55ஆவது நிமிடத்தில் கோலடித்து அணியின் கோல் கணக்கைத் தொடக்கிவைத்தார்.

மேலும் இந்தக் கோலின் மூலம் லிவர் பூல் அணி சாம்பியன் லீக் தொடர் வரலாற்றில் தனது 10 ஆயிரமாவது கோலைப் பதிவுசெய்து சாதனைப் படைத்தது.

இதையடுத்து ஆட்ட முடிவில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட லிவர்பூல் அணியின் முகமது சலா கோலடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். இறுதி வரை போராடிய மிட்ஜில்லேண்ட் அணியால் எதிரணியின் டிஃபென்ஸைத் தாண்டி கோலடிக்க முடியவில்லை.

இதன் மூலம் ஆட்டநேர முடிவில் லிவர்பூல் அணி 2-0 என்ற கோல் கணக்கில் மிட்ஜில்லேண்ட் எஃப்சி அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது.

இதையும் படிங்க:அத்லெடிகோவை பந்தாடியது பெயர்ன் முனிச்!

ABOUT THE AUTHOR

...view details