தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இங்., அணியுடனான போட்டியை ரத்து செய்தது நியூசி.,! - இங்கிலாந்து - நியூசிலாந்து

கரோனா அச்சுறுத்தல் காரணமாக நவ.12ஆம் தேதி நடத்துவதாக திட்டமிடப்பட்டிருந்த இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டியை நியூசிலாந்து கால்பந்து கூட்டமைப்பு ரத்து செய்துள்ளது.

Kiwis cancel game against England, cites COVID-19 concerns
Kiwis cancel game against England, cites COVID-19 concerns

By

Published : Oct 14, 2020, 4:00 PM IST

கரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகம் முழுவதும் விளையாட்டுப் போட்டிகள் கடந்த மார்ச் மாதம் முதல் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் தொற்றின் தாக்கம் சிறிதளவு கட்டுப்படுத்தப்பட்டபின், பார்வையாளர்களின்றி விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நட்பு ரீதியிலான கால்பந்து போட்டி நவம்பர் 12ஆம் தேதி, இங்கிலாந்திலுள்ள வெம்ப்ளி (Wembley)நகரில் நடத்துவதாக திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் கரோனா தொற்று குறித்த அச்சம், வீரர்களின் தனிமைப்படுத்துதல் காலம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு இப்போட்டியை ரத்து செய்வதாக நியூசிலாந்து கால்பந்து கூட்டமைப்பின் தலைமை நிர்வாகி ஆண்ட்ரூ பிராக்னெல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இங்கிலாந்து அணிகெதிரான போட்டியில் விளையாட எங்களுக்கும் விருப்பம்தான். இருப்பினும் கரோனா வைரஸ் பரவும் சூழலில், வீரர்களின் பயணம், தனிமைப்படுத்துதல் காலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இப்போட்டியை ரத்து செய்வதாக நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

நியூசிலாந்து கால்பந்து அணி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள உலகக்கோப்பை தகுதிச் சுற்றில் மட்டுமே பங்கேற்கும்” என்றும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: டெல்லிக்கு தண்ணீர் காட்டுமா ராஜஸ்தான்!

ABOUT THE AUTHOR

...view details