தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஐஎஸ்எல்: ஸ்டீபன் கோலால் தோல்வியடைந்த பெங்களூரு! - ஐஎஸ்எல்

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணி 1-0 என்ற கோல் கணக்கில் பெங்களூரு எஃப்சி அணியை வீழ்த்தியது.

ISL: Stephen Eze's header helps Jamshedpur beat Bengaluru 1-0
ISL: Stephen Eze's header helps Jamshedpur beat Bengaluru 1-0

By

Published : Dec 29, 2020, 8:26 AM IST

கரோனா கட்டுப்பாடு விதிகளுடன் நடைபெற்றுவரும் ஐஎஸ்எல் கால்பந்து தொடர் விறுவிறுப்புக்குப் பஞ்சமின்றி நடந்துவருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணி - பெங்களூரு எஃப்சி அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது.

பரபரப்புடன் தொடங்கிய இப்போட்டியின் ஆரம்பம் முதலே இரு அணி வீரர்களும் வலிமையான டிஃபென்ஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் கோலேதுமின்றி சமநிலையில் இருந்தன.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில் சிறப்பாகச் செயல்பட்ட ஜாம்ஷெட்பூர் அணியின் ஸ்டீபன் ஈஸ் ஆட்டத்தின் 79ஆவது நிமிடத்தில் கோலடித்து அணிக்கு வெற்றி வாய்ப்பை உருவாக்கிக்கொடுத்தார்.

இதன்மூலம் ஆட்டநேர முடிவில் ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணி 1-0 என்ற கோல் கணக்கில் பெங்களூரு எஃப்சி அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் ஜாம்ஷெட்பூர் அணி 13 புள்ளிகளைப் பெற்று ஐஎஸ்எல் புள்ளிப்பட்டியலில் மூன்றாம் இடத்திற்கு முன்னேறியது.

இதையும் படிங்க:கடந்த 10 ஆண்டுகளில் மனதுக்கு நெருக்கமான தருணங்களை பகிர்ந்த கோலி...

ABOUT THE AUTHOR

...view details