இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் ஆறாவது சீசனுக்கான போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இதில், இன்று நடைபெற்ற லீக் போட்டியில் மும்பை சிட்டி எஃப்.சி அணி - ஜாம்ஷெத்பூர் எஃப்.சி ஆகிய அணிகள் மோதின.
ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெத்பூரில் உள்ள ஜேஆர்டி டாடா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக அமைந்தது. போட்டியில் 15ஆவது நிமிடத்திலேயே மும்பை வீரர் பாவ்லோ கோல் அடித்தார். இதைத் தொடர்ந்து 37ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெத்பூர் வீரர் ஜோஸ் லூயிஸ் அர்ரோயோ ஒரு கோல் அடித்து தனது அணியை சமநிலை பெறவைத்தார். இதனால் முதல் பாதி ஆட்டம் சமனில் நிறைவடைந்தது.