தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஐஎஸ்எல், ஐ லீக் அணிகளுக்கு அடித்தது ஜாக்பாட்! - நேரடியாக ஆசிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் பங்கேற்களாம்

டெல்லி: இந்த சீசனுக்கான ஐஎஸ்எல், ஐ லீக் பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்கும் அணிகள் நேரடியாக ஆசிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்துத் தொடரில் பங்கேற்கலாம் என ஆசியக் கால்பந்து கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Asian Champions League
Asian Champions League

By

Published : Dec 10, 2019, 11:48 PM IST

கிரிக்கெட்டிற்கு இந்தியாவில் ஐபிஎல் தொடரைப் போலவே கால்பந்துப் போட்டிக்கும் இந்தியன் சூப்பர் லீக், ஐ லீக் ஆகிய தொடர்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஆசியக் கால்பந்து கூட்டமைப்பு இந்த இரு தொடர்களிலும் பங்கேற்கும் அணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றைத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஆசியக் கால்பந்து கூட்டமைப்பு வெளியிட்ட செய்தி அறிக்கையில், '2019-20ஆம் ஆண்டு சீசனுக்கான இந்தியன் சூப்பர் லீக், ஐ லீக் தொடரில் முதலிடம் பிடிக்கும் அணிகள் 2021ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய சாம்பியன்ஸ் லீக் தொடருக்கு நேரடியாகத் தகுதி பெறும்' என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஆசிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடருக்கு இந்தியா சார்பாக 17 ஆண்டுகளுக்குப் பிறகு கால்பந்து அணிகள் பங்கேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தெற்காசிய விளையாட்டுப் போட்டி: பதக்க பட்டியலில் புதிய சாதனைப் படைத்த இந்தியா!

ABOUT THE AUTHOR

...view details