தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஐஎஸ்எல்: மீண்டும் மும்பையிடம் வீழ்ந்த கேரளா பிளாஸ்டர்ஸ்

ஐஎஸ்எல் கால்பந்துத் தொடரின் நேற்றைய (பிப். 3) லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எஃப்சி அணி 2-1 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.

ISL 7: Mumbai City claw back to down Kerala Blasters
ISL 7: Mumbai City claw back to down Kerala Blasters

By

Published : Feb 4, 2021, 9:05 AM IST

ஐஎஸ்எல் கால்பந்துத் தொடரின் ஏழாவது சீசன் இறுதிகட்டத்தை எட்டிவிட்டது. இதில் நேற்று (பிப். 3) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திலிருக்கும் மும்பை சிட்டி எஃப்சி அணி, புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடத்திலிருக்கும் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை எதிர்கொண்டது.

இப்போட்டியின் முதல்பாதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேரளா பிளாஸ்டர்ஸ் அணிக்கு ஆட்டத்தின் 27ஆவது நிமிடத்தில் விசென்ட் கோம்ஸ் மூலம் கோல் கிடைத்தது. இதனால் முதல் பாதி ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில், அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய மும்பை சிட்டி எஃப்சி அணிக்கு பிபின் சிங் 46ஆவது நிமிடத்தில் கோலடித்து அணியை தோல்வியிலிருந்து மீட்டார். பின்னர் ஆட்டத்தின் 67ஆவது நிமிடத்தின்போது மும்பை அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.

அதனைச் சரியாகப் பயன்படுத்தி ஆடம் லெ ஃபோண்ட்ரே கோலடித்து அசத்தினார். இதன்மூலம் ஆட்டநேர முடிவில் மும்பை சிட்டி எஃப்சி அணி 2-1 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் ஐஎஸ்எல் புள்ளிப்பட்டியலில் மும்பை சிட்டி எஃப்சி அணி 33 புள்ளிகளைப் பெற்று தொடர்ந்து முதலிடத்தைத் தக்கவைத்துக்கொண்டது.

இதையும் படிங்க:‘கரோனா சூழல் எப்படி இருந்தாலும் டோக்கியோ ஒலிம்பிக் நிச்சயம் நடைபெறும்’

ABOUT THE AUTHOR

...view details