ஐஎஸ்எல் கால்பந்து திருவிழா தற்போது இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெங்களூரு எஃப்சி அணி - எஃப்சி கோவா அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது.
இப்போட்டியின் ஆரம்பத்திலேயே அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கோவா அணிக்கு இகோர் அங்குலோ ஆட்டத்தின் 20ஆவது நிமிடத்திலும், ரிதீம் ட்லாங் 23ஆவது நிமிடத்திலும் அடுத்தடுத்த கோல்களை அடித்து அணியை முன்னிலைப்படுத்தினர்.
பின்னர் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பெங்களூரு எஃப்சி அணியின் சுரேஷ் சிங் ஆட்டத்தின் 33ஆவது நிமிடத்தில் கோலடித்தார். இதனால் முதல் பாதி ஆட்டத்தில் எஃப்சி கோவா அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.