இந்திய கால்பந்து அணியின் நட்சத்திர வீரராக வலம்வந்தவர் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பிரதீப் குமார் பானர்ஜி. தனது 16 வயதிலேயே சந்தோஷ் கோப்பை கால்பந்து தொடரில் அறிமுகமான இவர், 1955 முதல் 1967ஆம் ஆண்டுவரை இந்திய அணிக்காகப் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார்.
மேலும், 1962ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி தங்கப்பதக்கம் வெல்லவும் முக்கியப் பங்கு வகித்தார். அதன்பின் 1956ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய அணியிலும் அங்கம் வகித்தவர். பின் 1960ஆம் ஆண்டு இத்தாலியில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடருக்கான இந்திய கால்பந்து அணியின் கேப்டனாவும் செயல்பட்டார்.
மேலும் 1961ஆம் ஆண்டு இந்திய அரசின் சார்பாக விளையாட்டுத் துறையில் சாதனைப் படைத்தவர்களுக்கு வழங்கப்படும் அர்ஜூனா விருதையும்,1990ஆம் ஆண்டு இந்திய அரசின் நான்காவது மிகப்பெரும் விருதான பத்ம ஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார்.