தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஃபிபா தரவரிசையில் பின்தங்கிய இந்தியா! - இந்தியா

ஃபிபா வெளியிட்ட சர்வதேச அணிகளுக்கான தரவரிசைப் பட்டியில் இந்திய அணி 103ஆவது இடத்தில் உள்ளது.

ஃபிபா தரவரிசையில் பின்தங்கிய இந்தியா!

By

Published : Jul 25, 2019, 11:29 PM IST

சர்வேதச கால்பந்து அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலை ஃபிபா வெளியிட்டுள்ளது. அதன்படி, பெல்ஜியம் அணி 1746 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. இரண்டாவது இடத்தில் இருந்த உலக சாம்பியன் பிரான்ஸ் ஒரு இடம் சரிவடைந்து மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

அதேசமயம், கோபா அமெரிக்கா கோப்பையை வென்ற பிரேசில் அணி மூன்றாவது இடத்திலிருந்து இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

இதில், 101 ஆவது இடத்தில் இருந்த இந்திய அணி இரண்டு இடங்கள் சரிவடைந்து 103ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற இன்டர்கான்டினென்டல் சூப்பர் தொடரில் இந்திய அணி குரூப் சுற்றோடு நடையைக் கட்டியதால்தான் தரவரிசையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

ABOUT THE AUTHOR

...view details