தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

மெஸ்ஸியை பாராட்டிய பீலே! - மெஸ்ஸி சாதனை

தனது சாதனையை முறியடித்த பார்சிலோனா எஃப்சி அணியின் கேப்டன் மெஸ்ஸியை, கால்பந்து ஜாம்பவான் பீலே பாராட்டி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

I admire you very much: Pele congratulates Lionel Messi
I admire you very much: Pele congratulates Lionel Messi

By

Published : Dec 20, 2020, 8:55 PM IST

லாலிகா கால்பந்து தொடரில் நேற்று (டிச.20) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பார்சிலோனா எஃப்சி அணி - வலென்சியா எஃப்சி அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. இப்போட்டியில் இரு அணிகளும் தலா 2 கோல்களை எடுத்ததால் ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.

மெஸ்ஸி சாதனை

இப்போட்டியில் பார்சிலோனா அணியின் கேப்டன் மெஸ்ஸி கோலடித்ததன் மூலம், பார்சிலோனா அணிக்காக தனது 643ஆவது கோலை பதிவுசெய்து அசத்தினார். இதன் மூலம் ஒரு அணிக்காக விளையாடி அதிக கோல்களை அடித்த வீரர் என்ற பீலேவின் சாதனையை சமன் செய்தார்.

பீலே பாராட்டு

மெஸ்ஸியை பாராட்டிய பீலே

இதையடுத்து கால்பந்து ஜாம்பவான் பீலே தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் மெஸ்ஸியை பாராட்டி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “உங்கள் வரலாற்று சாதனைக்கு என்னுடைய வாழ்த்துக்கள், லியோனல் மெஸ்ஸி. எல்லாவற்றிற்கும் மேலாக, பார்சிலோனா அணியில் நீங்கள் இவ்வளவு காலம் விளையாடி வருவது பெருமையாகவுள்ளது. உங்களைப் போன்ற வீரர்கள் ஒரே கால்பந்து அணியில் விளையாடுவது மிகவும் அரிதான ஒன்று. இதற்காகவே நான் உங்களை மிகவும் ரசிக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:முஷ்டாக் அலி தொடரிலிருந்து முரளி விஜய் விலகல்!

ABOUT THE AUTHOR

...view details