தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

கொரோனா வைரஸால் தள்ளிப்போகிறதா யூரோ கோப்பை?

2020ஆம் ஆண்டுக்கான யூரோ கோப்பைக் கால்பந்து தொடர் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஒத்தி வைக்கப்படுமா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

german-football-clubs-demand-postponement-of-euro-2020
german-football-clubs-demand-postponement-of-euro-2020

By

Published : Mar 17, 2020, 11:29 AM IST

கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகின் பல்வேறு இடங்களிலும் விளையாட்டுப் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுவருகின்றன. சில போட்டிகளின் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனிடையே 2020ஆம் ஆண்டுக்கான யூரோ கோப்பைக் கால்பந்து தொடர் விரைவில் தொடங்கவுள்ளது.

இந்நிலையில் ஜெர்மன் கால்பந்து கிளப் அணிகள் சார்பாக யூரோ கோப்பை கால்பந்து போட்டிகளை ஒத்திவைப்பதற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் நடந்துகொண்டிருந்த கால்பந்து தொடர்கள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் தொடர்கள் முடிக்கப்படாமல் ரத்து செய்யப்படுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளது.

அதேசமயம் ஐரோப்பிய கால்பந்து சம்மேளனத்தின் நிர்வாகிகள் கூட்டம் இன்று நடக்கவுள்ளது. இந்தக் கூட்டத்தில் இரண்டு முக்கிய ஆலோசனைகள் நடக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டு சீனாவில் நடக்கவுள்ள கிளப் அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பைத் தொடர், கான்ட்டினென்ட்டல் தொடர்களை ஒத்திவைக்கவும் ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளது.

கான்ட்டினென்ட்டல் போட்டிகளை ஒத்தி வைக்கப்படுவது ஜெர்மன் கால்பந்து சம்மேளனம், ஃபுல்சல் லீகா ஆகிய கால்பந்து தொடர்களுக்கு சாதகமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஆளில்லாமல் நடைபெறும் WWE!

ABOUT THE AUTHOR

...view details