கோலாலம்பூர் (மலேசியா): வரும் 2022ஆம் ஆண்டு நடைபெறும் பிபா உலககோப்பை தொடருக்கான ஆசிய நாடுகளின் குரூப் 'ஏ' தகுதிச்சுற்று போட்டிகள், வரும் 2023ஆம் ஆண்டில் நடைபெறும் ஏஎஃப்சி ஆசிய கோப்பை ஆகிய தொடர்கள் சீனாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், அத்தொடர்கள் சீனாவுக்கு பதிலாக வேறு நாட்டில் நடத்தப்படும் என ஆசிய கால்பந்து கூட்டமைப்பு (ஏஎஃப்சி) இன்று (மே.31) அறவித்துள்ளது.
இந்தத் தொடர்களில் பங்கேற்கும் பல அணிகள் சீனாவில் போட்டியை நடத்த கடும் அதிருப்தி தெரிவித்ததால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஆசிய தகுதிசுற்றுப் போட்டிகளை சுமுகமாக நடத்திட, சீனா மற்றும் பொதுவான நாடுகளைக்கு இடையே நல்லுறவை வலுப்படுத்த ஏஎஃப்சி பெரும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது.