லா லிகா கால்பந்து தொடரின் நேற்றைய லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் பார்சிலோனா அணி, கெடாஃபே அணியுடன் மோதியது. இப்போட்டியில் ஆதிக்கம் செலுத்திய பார்சிலோனா அணிக்கு கோல் அடிக்க பல வாய்ப்புகள் கிடைத்தன. குறிப்பாக, மெஸ்ஸிக்கு கிடைத்த வாய்ப்புகளெல்லாம் அவரால் சரியாக ஃபினிஷ் செய்ய முடியவில்லை. இருப்பினும், ஆட்டத்தின் 33ஆவது நிமிடத்தில் மெஸ்ஸியின் அற்புதமான அசிஸ்டால் சக வீரர் க்ரீஸ்மேன் கோல் அடித்தார்.
இதைத்தொடர்ந்து, 39ஆவது நிமிடத்தில் பார்சிலோனா அணியின் லெஃப்ட் - பேக் ஜூனியர் ஃபிர்போவின் பாஸை சக வீரர் செர்ஜியோ ரோபர்டோ கோல் அடித்தார். இதையடுத்து, நடைபெற்ற இரண்டாம் பாதியில் கெடாஃபே அணி அட்டாக்கிங் செய்து விளையாடியது.