ஐரோப்பிய நாடுகளுக்கான யூரோ கோப்பை கால்பந்து தொடர் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டுவருகிறது. ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கு அடுத்தப்படியாக இந்தத் தொடர் மிக முக்கியத் தொடராகப் பார்க்கப்படுகிறது. அந்த வகையில், இதன் 16ஆவது யூரோ கோப்பை தொடர் வரும் ஜூன் 12 முதல் தொடங்கி ஜூலை 12 வரை லண்டன், முனிச், ரோம் உள்ளிட்ட ஐரோப்பாவின் 12 நகரங்களில் நடைபெறவிருந்தது.
இதனிடையே, சீனாவில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸால் ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கோவிட்-19 வைரஸால் இத்தாலியில் 2,158 பேரும், ஸ்பெயினில் 491 பேரும் உயிரிழந்துள்ளனர். இதனால், யூரோ கோப்பை கால்பந்து தொடர் திட்டமிட்டப்படி நடைபெறுமா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.