அர்ஜென்டினாவைச் சேர்ந்த கால்பந்து வீரர் பவுலோ டிபாலா, இத்தாலியின் சீரி ஏ தொடரில் யுவென்டஸ் அணிக்காக விளையாடிவருகிறார். தற்போது உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுவருகின்றனர்.
"நான் இன்னும் முழுமையாக குணமடையவில்லை"- பவுலோ டிபாலா
கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டுவந்திருந்தாலும், இன்னும் முழுமையாக குணமடையவில்லை என யுவென்டஸ் கால்பந்து அணியின் முன்கள வீரர் பவுலோ டிபாலா தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் டிபாலாவிற்கும் கரோனா வைரஸ் இருப்பது உறுதியானது. இதையடுத்து, அவர் தனது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். ஒரு மாதத்திற்கும் மேலான தனிமைப்படுத்தலுக்குப் பின் கடந்த ஆறாம் தேதி(ஜூன் 6) மேற்கொண்ட கரோனா கண்டறிதல் சோதனை முடிவில், டிபாலா கரோனாவிலிருந்து குணமடைந்தது தெரியந்தது.
இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பேசிய டிபாலா, 'நான் தற்போது கரோனா வைரஸிலிருந்து மீண்டு வந்துள்ளேன். இருப்பினும் நான் நூறு விழுக்காடு பூரண குணமடையவில்லை. ஆனால் முன்பு இருந்ததைவிட, தற்போது சிறப்பாக உணர்கிறேன். மேலும் தற்போது விளையாட்டுப் போட்டிகள் தொடங்கப்பட உள்ளதால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளோம். அதேசமயம் வீரர்களுடன் இணைந்து நானும் இன்னும் சிறிது காலத்தில் எனது பயிற்சி மேற்கொள்வேன்' என்று தெரிவித்தார்.