பொதுவாக, கல்வி, அரசியல், சினிமா, மருத்துவம் ஆகிய துறைகளில்தான் தலைமுறை தலைமுறையாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த வாரிசுகள் தடம்பதித்து வருவதை நாம் கேள்விபட்டிருப்போம். ஆனால், முதல்முறையாக கால்பந்து போட்டியில் அதுவும் ஒரே அணிக்கு ஒரே வம்சாவளியைச் சேர்ந்த மூன்றாவது வாரிசு இடம்பெற்றிருப்பது அனைவரது புருவத்தையும் உயர்த்தியுள்ளது.
ஆம், இத்தாலியில் நடைபெற்றுவரும் சீரி ஏ கால்பந்து லீக் தொடரில் வெரானா அணிக்கு எதிரான போட்டியில் ஏசி மிலண் அணிக்காக டேனியல் மால்டினி அறிமுகமாகியுள்ளார். இவரது தந்தை பாவ்லோ மால்டினி கால்பந்து உலகில் தலைசிறந்த டிஃபெண்டராக திகழ்ந்துள்ளார். ஏசி மிலண் அணிக்காக 1985 முதல் 2009 வரை 902 போட்டிகளில் விளையாடியுள்ளார். அவரது சிறப்பான டிஃபெண்டிங்கால் மேற்கூறிய காலக்கட்டத்தில் அந்த அணிக்கு 25 கோப்பைகளை வென்றுதந்துள்ளார்.