கால்பந்து விளையாட்டில் ரொனால்டோ தலைசிறந்த வீரராக திகழ்ந்து வருகிறார். 2009இல் இருந்து 2018 மே வரை ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடிவந்த அவர், 2018 ஜூன் மாதத்தில் இருந்து இத்தாலியின் யுவண்டஸ் அணிக்கு விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
'கற்றோர்க்கு செல்லும் இடம் எல்லாம் சிறப்பு' என்ற பழமொழிக்கு ஏற்றது போல, ரொனால்டோ தனது சிறப்பான ஆட்டத்தை இத்தாலியிலும் வெளிப்படுத்தினார். அவரது சிறப்பான ஆட்டத்தால், யுவண்டஸ் அணி சீரி ஏ கால்பந்து தொடரில் அதிகமான போட்டிகளில் வெற்றிபெற்றது.