தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

மீண்டும் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் ரொனால்டோ - குஷியில் ரசிகர்கள் - ரொனால்டோ

கால்பந்து நட்சத்திரமான கிறிஸ்டியானோ ரொனால்டோ, மீண்டும் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இணைவது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Ronaldo
ரொனால்டோ

By

Published : Aug 28, 2021, 8:09 AM IST

போர்ச்சுகல் கால்பந்து அணியின் கேப்டனும், நட்சத்திர வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ ஜூவன்டஸ் அணியிலிருந்து விலகியுள்ள நிலையில், மீண்டும் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இணைகிறார்.

முன்னதாக, ஜூவன்டஸ் அணிக்காக விளையாட விருப்பம் இல்லை என ரொனால்டோ கூறியதாக அந்த அணியின் பயிற்சியாளர் மாக்சிமிலியன் அலெக்ரி செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்திருந்தார். இது கால்பந்து கிளப்புகள் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

25 மில்லியன் யூரோவுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட ரொனால்டோ

இதையடுத்து, ரொனால்டோவை ஒப்பந்தம் செய்ய பல முன்னணி கிளப்புகள் களத்தில் இறங்கிய சூழ்நிலையில், அவர் மீண்டும் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் சேர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. அவரை மான்செஸ்டர் யுனைடெட் அணி 25 மில்லியன் யூரோவுக்கு ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

2003 முதல் 2009ஆம் ஆண்டு வரை மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக ஆறு சீசன்களில் விளையாடிய இவர், 292 ஆட்டங்களில் 118 கோல்கள் அடித்து அசத்தியுள்ளார். மேலும் அந்த அணி எட்டு கோப்பைகளை வெல்ல உதவிபுரிந்துள்ளார்.

2009இல் மான்செஸ்டர் அணியிலிருந்து விலகிய ரொனால்டோ, ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடினார். பின்னர், 2018இல் ஜூவன்டஸ் அணியில் விளையாட ஒப்பந்தம் ஆனது குறிப்பிடத்தக்கது. மீண்டும் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு ரொனால்டோ திரும்பியிருப்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க:LEEDS TEST DAY 3: புயல் வேகத்தில் புஜாரா; நிறைவேறுமா கோலியின் 71

ABOUT THE AUTHOR

...view details