கோவிட்-19 பெருந்தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக உலகம் முழுவதும் அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதில் கால்பந்தாட்டத்தின் முக்கிய தொடர்களான சிரி ஏ, லலிகா, பிரீமியர் லீக், ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் உள்ளிட்ட முக்கிய தொடர்களும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு, அனைத்து கால்பந்து கூட்டமைப்பு நிர்வாகிகளுடனனான கூட்டம் காணொலி உரையாடல் (video conference )மூலம் நடைபெற்றது.
அக்கூட்டத்தில் உள்நாட்டு கூட்டமைப்புகள் தங்களது தொடர்களை விரைவில் முடிக்க முயற்சி செய்யுங்கள் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தொடர்களை மீண்டும் நடத்துவது குறித்து உறுதியான முடிவுகளை மேற்கொள்ளவுள்ளோம். இதற்கான புதிய வரைமுறை பட்டியலை உருவாக்குவதில் ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு மும்முரம் காட்டிவருகிறது. அனைத்து உள்நாட்டு கால்பந்து கூட்டமைப்புகளும் தங்கள் கால்பந்து தொடர்களை விரைவில் முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்' என்று குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க:'ரொனால்டோவை விட சிறந்த வீரர் மெஸ்ஸி' - வேய்ன் ரூனி!