தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

'அர்ஜென்டினாவுக்கு கோப்பை பெற்று தருவதே எனது பெருங்கனவு' லியோனல் மெஸ்ஸி - கோபா அமெரிக்கா 2021

அர்ஜென்டினா தேசிய அணிக்கு பட்டம் வாங்கித் தருவதே எனது வாழ்க்கையின் பெருங்கனவு என, நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.

லியோனல் மெஸ்ஸி
லியோனல் மெஸ்ஸி

By

Published : Jun 14, 2021, 7:33 PM IST

தென் அமெரிக்க கண்டத்தின் முன்னணி கால்பந்து தொடரான 2021 கோபா அமெரிக்கா (2021 Copa America) கால்பந்து தொடர் நேற்று (ஜூன்.13) தொடங்கியுள்ளது.

இதில் பிரேசில், அர்ஜென்டினா, சீலே உள்ளிட்ட முன்னணி கால்பந்தாட்ட அணிகள் களம் இறங்கியுள்ளன.

மெஸ்ஸியின் கனவு நனவாகுமா?

இதில் அர்ஜென்டினா அணியை முன்னிறுத்தி, நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்ஸி களமிறங்கவுள்ளார். 33 வயதான மெஸ்ஸிக்கு இந்தத் தொடரே இறுதி கோபா அமெரிக்கா தொடராக அமைலாம்.

அடுத்த தொடரானது நான்காண்டுகள் கழித்து நடைபெறும் என்ற நிலையில், வயது காரணமாக மெஸ்ஸி ஓய்வு பெற்றுவிடக்கூடும்.

எனவே 2021 தொடர் குறித்து நெகிழ்ச்சிக்குரிய கருத்தை மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.

"அர்ஜென்டினா தேசிய அணிக்கு பட்டம் வாங்கித் தருவதே எனது வாழ்க்கையின் பெருங்கனவு. இதுவரை அது நனவாகவில்லை. இருப்பினும் தொடர்ந்து முயற்சி செய்து கனவை அடைய போராடுவேன்" என மெஸ்ஸி கூறியுள்ளார்.

அர்ஜென்டினா தேசிய அணிக்கு ஒரு சாம்பியன்ஷிப் பட்டம் கூட பெற்றுத்தர முடியவில்லை என்ற குறை நட்சத்திர வீரர் மெஸ்ஸிக்கு நீண்ட நாள்களாகவே உள்ளது.

இந்தக் குறையை 2021 கோபா தொடரில் நிறைவேற்றுவாரா என்று அவரது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். அர்ஜென்டினா அணி தனது முதல் போட்டியில் சீலே அணியை எதிர்கொள்கிறது.

இதையும் படிங்க:யூரோ 2020 ரவுன்ட் அப்: முதல் வெற்றியை பதிவு செய்த இங்கிலாந்து அணி

ABOUT THE AUTHOR

...view details