பிரேசில் : 47-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி, ரியோ டி ஜெனீரோவில் உள்ள மரக்கானா மைதானத்தில் நேற்று (ஜூலை 10) நடைபெற்றது.
கோப்பையை கைப்பற்றிய அர்ஜென்டினா - argentina vs brazil
07:29 July 11
கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியின் சாம்பியன் பட்டத்தை 28 ஆண்டுகளுக்கு பிறகு அர்ஜென்டினா அணி கைப்பற்றியது.
நடப்பு சாம்பியன் பிரேசில், அர்ஜெண்டினாவை எதிர்கொண்டது. இதில் 1-0 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணியை அர்ஜென்டினா அணி வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.
அர்ஜென்டினா 28 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையை கைப்பற்றியது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடைசியாக 1993-ம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை அர்ஜென்டினா அணி வென்றது.
அதன்பிறகு தற்போது கோப்பையை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. அர்ஜென்டினாவின் வெற்றியை அந்நாட்டு ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படிங்க:இந்தியா - இலங்கை கிரிக்கெட் தொடரில் மாற்றம்