இந்தியா, தஜிகிஸ்தான் இடையே நேற்று நடைபெற்ற கால்பந்து போட்டியில், இரண்டு கோல்கள் அடித்ததன் மூலம் உலகில் அதிக கோல்கள் அடித்த சமகால வீரர்கள் பட்டியலில், இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி 2ஆவது இடத்துக்கு முன்னேறினார்.
அர்ஜெண்டினாவின் அதிரடி ஆட்டகாரர் லியானல் மெஸ்ஸி 128 ஆட்டங்களில் விளையாடி 65 கோல்கள் அடித்திருந்தார். இந்நிலையில், நேற்று நடைபெற்ற போட்டியில், லியானல் மெஸ்ஸியை பின்னுக்கு தள்ளிய இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி, 105 போட்டிகளில் 67 கோல்கள் அடித்து 2ஆவது இடத்துக்கு முன்னேறினார்.