2022 ஃபிஃபா உலகக்கோப்பை மற்றும் 2023ஆம் ஆண்டுக்கான ஏஎஃப்சி ஆசிய கோப்பை குவாலிஃபயர் சுற்றில் வங்கதேச அணியின் கேப்டனாக செயல்பட்டவர் ஜமால் பூயான். இவர் முஹமதன் எஸ்சி அணிக்காக ஐ லீக் தொடரில் விளையாடுவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இதே அணிக்காக இந்திய அணியின் கால்பந்து கேப்டன் சுனில் ஷேத்ரியும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து ஜமால் பூயான் கூறுகையில், '' ஃபிஃபா குவாலிஃபயர் போட்டியின்போது நானும், எனது பயிற்சியாளரும் ஆட்டத்தைப் பற்றி ஆலோசனை மேற்கொண்டிருந்தோம். அப்போது அவர் சுனில் ஷேத்ரியை தொடர்ந்து கட்டுப்படுத்துமாறு அறிவுறுத்தினார். அந்த வேளையை நான் எடுத்துக் கொண்டேன். என்னைப் பொறுத்தவரையில் சுனில் ஷேத்ரி இந்திய கால்பந்தின் பெரிய ஜாம்பவான்.