தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இளம் கால்பந்து வீரருக்கு ரியல் மாட்ரிட் கொடுத்த தொகை! - ரியல் மாட்ரிட்

பிரேசிலின் இளம் கால்பந்து வீரருக்கு ரியல் மாட்ரிட் அணி 70 மில்லியன் யூரோ வழங்க முன்வந்துள்ளது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ரெய்னியர்

By

Published : Mar 23, 2019, 8:24 PM IST


பிரேசிலின் பிளமேங்கோ அணிக்காக விளையாடி வருபவர் ரெய்னியர். 17 வயதே ஆகும் இவருக்கு, ஸ்பெயின் கால்பந்து கிளப் அணியான ரியல் மாட்ரிட், தங்கள் அணியில் விளையாடுவதற்கு, 70 மில்லியன் யூரோ வழங்க முன்வந்துள்ளதாக வெளியான தகவல் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

தற்போது ரெய்னியர், பிரேசிலின் 17 வயதுகுட்பட்டோருக்கான அணியில் விளையாடி வருகிறார். இதுவரை நான்கு ஆட்டங்களின் பங்கேற்றுள்ள ரெய்னியர், இரண்டு கோல்கள் அடுத்துள்ளார். லிவர்பூல், பாரிஸ் செயிண்ட்-ஜெர்மன், ஆர்சனல், மான்செஸ்டர் சிட்டி உள்ளிட்ட அணிகளையும் இவர் தனது விளையாட்டால் கவர்ந்துள்ளார்.

நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரோனால்டோ யுவண்டஸ் அணிக்கு இடம்பெயர்ந்த பின்னர், ரியல் மாட்ரிட் அணி பல்வேறு முக்கியத் தொடர்களில் தோல்வியடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details