கால்பந்து வீரர் மெஸ்ஸிக்கு உலகம் முழுவதும் பல்வேறு நட்சத்திரங்களும் ரசிகர்களாக இருந்துவருகின்றனர். அந்தவகையில் டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர், மெஸ்ஸியை புகழ்ந்துள்ள சம்பவம் ரசிகர்களிடயே ட்ரெண்டாகி வருகிறது.
மெஸ்ஸியின் காலுக்கு பந்து சென்றால்... - ஃபெடரர்! - Tennis
நட்சத்திர வீரர் மெஸ்ஸியின் காலுக்கு பந்து சென்றால், மூன்று விஷயங்களைத் தான் செய்வார் என டென்னிஸ் வீரர் ஃபெடரர் புகழ்ந்துள்ளார்.
மெஸ்ஸியிடம் தனக்கு பிடித்த விஷயம் தொடர்பாக பேசிய ஃபெடரர், 'மெஸ்ஸியின் கால்களுக்கு பந்து சென்றுவிட்டால் உடனடியாக கோல் போஸ்ட்டை நோக்கி நகர்வது தான் எனக்கு மிகவும் பிடித்த விஷயம்.
அதேபோல், மெஸ்ஸியின் கால்களில் பந்து இருக்கையில், மூன்று விஷயங்களை மட்டும் தான் அவர் செய்வார். அது என்னவென்றால், பந்தை பாஸ் செய்வது, லாவகமாக வீரர்களைக் கடந்துச் செல்வது, மூன்றாவது கோல் போஸ்ட்டை நோக்கி உதைப்பது என்பது தான். இதை மற்ற எந்த வீரரும் செய்து நான் பார்த்ததில்லை' என்றார். மேலும் சில வருடங்களுக்கு முன்னதாக, கால்பந்தின் சிறந்த வீரர் மெஸ்ஸி என இவர் பேசியது குறிப்பிடத்தக்கது.