தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இந்திய கால்பந்து வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்ட பாலா தேவி! - ஸ்காட்டிஷ் மகளிர் பிரீமியர் லீக்

பெங்களூரு: இந்தியாவின் நட்சத்திர கால்பந்துவீராங்கனை பாலா தேவி, இந்தியாவை விட்டு வேறொரு அணிக்காக கால்பந்து விளையாடும் முதல் வீராங்கனை என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

Bala Devi
Bala Devi

By

Published : Jan 30, 2020, 11:22 AM IST

இந்திய அணியின் நட்சத்திர கால்பந்துவீராங்கனையாக வலம்வருபவர் மனிப்பூரைச் சேர்ந்த பாலா தேவி. இந்திய அணியின் அதிக கோல் அடித்த வீராங்கனையாக வலம்வரும் தேவி, தற்போது ஸ்காட்டிஷ் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் ரேஞ்சர்ஸ் கிளப் அணிக்காக 18 மாதங்களுக்கு ஒப்பந்தமாகவுள்ளார்.

இதன்மூலம் இந்தியா சார்பாக வெளிநாட்டில் நடக்கும் தொடருக்கு ஒப்பந்தமாகவுள்ள முதல் வீராங்கனை என்ற சாதனையும் படைத்துள்ளார் பாலா தேவி. மேலும் ஆசியாவிலிருந்து ரேஞ்சர்ஸ் அணிக்காக தகுதிபெற்ற முதல் கால்பந்து வீராங்கனை என்ற சாதனையும் அவர் படைத்துள்ளார்.

மேலும் இது குறித்து ரேஞ்சர்ஸ் அணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், இந்திய அணியின் அட்டாக்கிங் வீராங்கனையான பாலா தேவி, ரேஞ்சர்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தமானது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. மேலும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பயிற்சி ஆட்டத்திற்குப்பின் அவர் 18 மாத ஒப்பந்தத்துடன் எங்களது கிளப்பில் இணைவார் எனப் பதிவிட்டுள்ளது.

இது பற்றி பாலா தேவி கூறுகையில், "இந்த 18 மாத ஒப்பந்தத்தில் என்னுடைய முழுத்திறனையும் நான் வெளிப்படுத்துவேன். மேலும் எனது இந்த ஒப்பந்தம் மற்ற இளைஞர்களுக்கும் ஒரு உத்வேகத்தை அளித்துள்ளது. ஆனால் நான் ஐரோப்பாவிலுள்ள ஒரு புகழ்பெற்ற கால்பந்து கிளப்பில் விளையாடுவேன் என கனவுகூட கண்டதில்லை" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'இந்த வெற்றியை வில்லியம்சன் பெற்றிருக்க வேண்டும்' - கோலி

ABOUT THE AUTHOR

...view details