தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

சிங்கம் இஸ் பேக்... அர்ஜென்டினா அணிக்கு திரும்பும் மெஸ்ஸி - lionel messi back in argentina

பியூனஸ் ஏர்ஸ் கால்பந்து நட்சத்திரமான லயனல் மெஸ்ஸி, மீண்டும் தனது தாய்நாட்டு அணியான அர்ஜென்டினா அணியில் இம்மாதம் களமிறங்குகிறார்.

messi

By

Published : Nov 1, 2019, 8:16 PM IST

அர்ஜென்டினா அணியைச் சேர்ந்த லயனல் மெஸ்ஸி கால்பந்து உலகின் முன்னணி நட்சத்திரமாக திகழ்கிறார். அர்ஜென்டினா அணியின் கேப்டானாகவும் உள்ள மெஸ்ஸி அந்த அணிக்காக பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார்.

மெஸ்ஸி, இறுதியாக கோப்பா அமெரிக்கா தொடரில் மூன்றாவது இடத்துக்காக அர்ஜென்டினா - சிலி அணிகள் மோதிய போட்டியின்போது கடைசியாக விளையாடினார். அதன்பின் கோப்பா அமெரிக்க கால்பந்து நிர்வாகம், பிரேசில் அணி வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் செயல்படுவதாக மெஸ்ஸி குற்றச்சாட்டை முன்வைத்தார். மெஸ்ஸியின் இந்தக் கருத்துக்காக அவருக்கு மூன்று மாதம் இடைநீக்கம் செய்து தென் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு உத்தரவிட்டது.

இதனால் மெஸ்ஸி அர்ஜென்டினா அணியில் களமிறங்காமல் இருந்தார். மெஸ்ஸி இல்லாமல் அர்ஜென்டினா அணி நான்கு போட்டிகளில் விளையாடியது. அதில் மெக்சிகோ, ஈக்குவேடார் அணிகளுக்கு எதிரான போட்டியில் வெற்றியும் சிலி, ஜெர்மனி அணிகளுக்கு எதிரான போட்டியில் டிராவும் செய்திருந்தது.

மெஸ்ஸி, தற்போது பார்சிலோனா கிளப் அணிக்காக சாம்பியன்ஸ் லீக், லா லிகா உள்ளிட்ட தொடர்களில் விளையாடிவருகிறார். சமீபத்தில் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரராக தேர்வு செய்யப்பட்ட அவருக்கு கோல்டன் பூட்டும் வழங்கப்பட்டது. இது தவிர கிளப் அணிக்காக அதிக கோல் அடித்த வீரர் என்ற சாதனையையும் மெஸ்ஸி சமீபத்தில் படைத்தார்.

இதனிடையே அர்ஜென்டினா அடுத்ததாக நவம்பர் 15ஆம் தேதி பிரேசிலையும் 18ஆம் தேதி உருகுவேவையும் நட்பு ரீதியிலான போட்டியில் சந்திக்கிறது. இந்தப் போட்டிக்கான வீரர்கள் பட்டியலில் மெஸ்ஸியின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அவர் அர்ஜென்டினா அணிக்கு மீண்டும் களமிறங்கவுள்ளார். இது அந்நாட்டு ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details