1970இல் பாங்காக்கில் நடைபெற்ற ஆசிய போட்டியில் கால்பந்து பிரிவில் வெண்கலப் பதக்கம் பெற்ற இந்திய அணியில் இடம்பிடித்திருந்தவர் அப்தில் லதிப். நடுகள வீரரான இவர் 1968இல் பர்மா அணிக்கு எதிரான ஆசிய கோப்பை தகுதிச் சுற்று போட்டியின் மூலம் இந்திய அணியில் அறிமுகமானார்.
அதன்பின் இந்திய அணிக்காக நான்கு போட்டியில் விளையாடிய இவர், 1969ஆம் ஆண்டில் சிங்கப்பூர் அணிக்கு எதிரான மார்கெடா தொடரில் ஒரு கோல் அடித்துள்ளார். சர்வதேச போட்டிகளை விடவும் உள்ளூர் போட்டியில் அனுபவம் வாய்ந்த வீரராகத் திகழ்ந்துள்ளார். சந்தோஷ் டிராபி தொடரில் பெங்கால் அணிக்காக விளையாடியுள்ளார். அதேபோல், முகமதீன் ஸ்போர்டிங் கிளப் அணிக்காக 35 கோல் அடித்துள்ளார்.