பெங்களூரு: உலக கோப்பை தொடரின் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய தொடக்க வீரரான மிட்செல் மார்ஸ் - டேவிட் வார்னர் ஜோடி 259 ரன்கள் பார்ட்னர்ஷிப் குவித்தனர். இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஸ் களம் இறங்கினர். ஆட்டத்தின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்த ஜோடி 203 பந்துகளில் 259 ரன்களை குவித்தது.
இதில் இடது கை பேட்டரான டேவிட் வார்னர் 85 பந்துகளில் சதமும், மிட்செல் மார்ஸ் 100 பந்துகளில் சதமும் விளாசினர். இந்த அபார பார்ட்னர்ஷிப்பின் மூலம், ஆஸ்திரேலிய அணிக்காக இரண்டாவது அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ரன்களை பதிவு செய்து அசத்தினர். முன்னதாக 2015ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மீத் - வார்னர் ஜோடி 260 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை பதிவு செய்தது.
உலக கோப்பையில் அதிக பார்ட்னர்ஷிப் ரன்கள்
இந்த ஆட்டத்தில் மார்ஸ் - வார்னர் பதிவு செய்த இந்த பார்ட்னர்ஷிப்பானது, உலக கோப்பையில் 6வது அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ரன்கள் ஆகும்.
372 - கிரீஸ் கெயில் மற்றும் மார்லன் சாமுவேல்ஸ் (மேற்கிந்திய தீவுகள்) எதிராக ஜிம்பாப்வே, கான்பெர்ரா, 2015
318 - சௌரவ் கங்குலி மற்றும் ராகுல் டிராவிட் (இந்தியா) எதிராக இலங்கை, டவுன்டன், 1999
282 - திலகரத்ன தில்ஷன் மற்றும் உபுல் தரங்கா (இலங்கை) எதிராக ஜிம்பாப்வே, பல்லேகெலே, 2011
273* - டெவோன் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா (நியூசிலாந்து) எதிராக இங்கிலாந்து, அகமதாபாத், 2023
260 - டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் (ஆஸ்திரேலியா) எதிராக ஆப்கானிஸ்தான், பெர்த், 2015
259 - டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஸ் (ஆஸ்திரேலியா) எதிராக பாகிஸ்தான், பெங்களூரு, 2023
உலக கோப்பையில் அதிக சதங்கள்
இந்த போட்டியில் டேவிட் வார்னர் சதம் அடித்ததன் மூலம் உலக கோப்பையில் அதிக சதங்கள் அடித்த பட்டியலில் இடம் பிடித்துள்ளார். இவர் இதுவரை ஒருநாள் உலக கோப்பையில் 5 சதங்களை பூர்த்தி செய்துள்ளார்.
7 - ரோஹித் சர்மா
6 - சச்சின் டெண்டுல்கர்