தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

தமிழ்நாடு முழுவதும் நான்கு மைதானங்களில் நடைபெற உள்ள டி.என்.பி.எல்; ஜூன் 23ஆம் தேதி துவங்குகிறது - chennai

இந்த ஆண்டிற்கான தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி(TNPL) ஜூன் 23ஆம் தேதி துவங்குகிறது. கோவையிலும் டி.என்.பி.எல் போட்டிகள் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் நான்கு மைதனங்களில் நடைபெற உள்ள டி.என்.பி.எல்
தமிழ்நாடு முழுவதும் நான்கு மைதனங்களில் நடைபெற உள்ள டி.என்.பி.எல்

By

Published : Jun 10, 2022, 9:15 AM IST

Updated : Jun 10, 2022, 9:21 AM IST

கோவை: இந்த ஆண்டிற்கான தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி(TNPL) ஜூன் 23ஆம் தேதி துவங்குகிறது. 8 அணிகள் இதில் பங்கேற்கின்றன. கோவை மாவட்டத்தில் ஜூலை மாதம் 10, 11, 12, 13, 15, 16, மற்றும் 29 ஆகிய தேதியிலும் இறுதிப்போட்டி 31ம் தேதியும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியாளர் சந்திப்பு கோவை காந்திபுரம் தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பிரீமியர் லீக் விளையாட்டு குழுவினர், இந்த ஆண்டு போட்டி ஜூன் 23ஆம் தேதி திருநெல்வேலியில் துவங்குகிறது. அதனை தொடர்ந்து நத்தம், சேலம், கோவை ஆகிய நகரங்களிலும் நடைபெற உள்ளது. இறுதிப் போட்டி கோவையில் நடைபெறுகிறது.

தமிழ்நாடு முழுவதும் நான்கு மைதனங்களில் நடைபெற உள்ள டி.என்.பி.எல்

இதில் நடராஜன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். அதிக பார்வையாளர்களை எதிர்பார்க்கிறோம் என தெரிவித்தனர்.

இதையும் படிங்க: செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் ஜூலை 28ஆம் தேதி நடைபெற உள்ளது - அமைச்சர் மெய்யநாதன்!

Last Updated : Jun 10, 2022, 9:21 AM IST

ABOUT THE AUTHOR

...view details