தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

தொடங்குகிறது தமிழ்நாட்டின் ஐபிஎல்: முதல் போட்டியில் கோவை - சேலம் மோதல் - TNPL 5th season

தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) ஐந்தாவது சீசன் இன்று (ஜூலை 19) சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் தொடங்குகிறது. முதல் லீக் ஆட்டத்தில் ஷாருக்கான் தலைமையிலான லைகா கோவை கிங்ஸும், டேரில் பெராரியோ தலைமையிலான சேலம் ஸ்பார்டன்ஸும் மோதுகின்றன.

ஷாருக்கான், விஜய் சங்கர், லைகா கோவை கிங்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், டிஎன்பிஎல்
TNPL begins today

By

Published : Jul 19, 2021, 6:36 PM IST

Updated : Jul 19, 2021, 7:50 PM IST

சென்னை:தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் டி20 தொடரான டிஎன்பிஎல் தொடரின் ஐந்தாவது சீசன் சென்னையில் இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், லைகா கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருச்சி வாரியர்ஸ், ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ், சீசெம் மதுரை பாந்தர்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் என எட்டு அணிகள் மோதும் இந்தத் தொடரில் மொத்தம் 28 லீக் ஆட்டங்கள் நடைபெற இருக்கின்றன.

ரவுண்ட் ராபின்

ரவுண்ட் ராபின் முறையில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு போட்டியில் மோதும். லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் குவாலிபையர், எலிமினேட்டர் முறையில் இறுதிப்போட்டிக்குத் தகுதிபெறும்.

வார நாள்களில் ஒரு போட்டியும் (இரவு 7.30 மணி), வார இறுதி நாள்களில் இரண்டு போட்டிகளும் (மதியம் 3.30 மணி) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்தொடர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ், ஸ்போர்ட்ஸ் 2 தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பாகிறது.

இன்றையப் போட்டி

இன்று நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில், ஷாருக்கான் தலைமையிலான லைகா கோவை கிங்ஸ் அணியும், டேரில் பெராரியோ தலைமையிலான சேலம் ஸ்பார்டன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

நட்சத்திர வீரர்களான ரவிச்சந்திரன் அஸ்வின், நடராஜன், வாஷிங்டன் சுந்தர், முரளி விஜய், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இத்தொடரில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: டிஎன்பிஎல் கிரிக்கெட்: அட்டவணை வெளியீடு

Last Updated : Jul 19, 2021, 7:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details