தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

TNPL 2021: திருச்சி வாரியர்ஸ் வெற்றி; சிதைந்தது சேலம்!

சேலம் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் திருச்சி அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

திருச்சி வாரியர்ஸ் வெற்றி
திருச்சி வாரியர்ஸ் வெற்றி

By

Published : Aug 1, 2021, 11:15 PM IST

சென்னை: தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) தொடரின் ஐந்தாவது சீசன் கடந்த ஜூலை 19ஆம் தேதி தொடங்கியது. இத்தொடரின் 18ஆவது லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதின.

இப்போட்டியில் டாஸ் வென்ற திருச்சி அணி சேலம் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இதன்படி, சேலம் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 116 ரன்களையே சேர்த்தது.

திருச்சி அணி பந்துவீச்சில் சரவணன் குமார், பொய்யாமொழி ஆகியோர் 2 விக்கெட்டுகளையும், கேப்டன் ரஹில் ஷா, மதிவண்ணன், ஆண்டனி தாஸ், ஆகாஷ் சும்ரா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். சேலம் அணியில் முருகன் அஸ்வின் 21(21) ரன்களை அதிகபட்சமாக அடித்தார்.

எளிய இலக்கான 117 ரன்களை திருச்சி அணி, 18.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 120 ரன்களை எடுத்தது. இதன் மூலம், 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சேலம் அணியை வீழ்த்தியது.

திருச்சி அணியில் ஆதித்யா கணேஷ் 28(32) ரன்களுடனும், ஆண்டனி தாஸ் 24 (20) ரன்களுடனும் ஆட்டமிழக்கமால் இருந்தனர். சேலம் அணியில் பெரியசாமி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கேப்டன் ரஹில் ஷா ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதையும் படிங்க: சிந்து பெற்ற வெண்கலத்தால் ஒரு இடம் முன்னேறிய இந்தியா; சீனா முதலிடம்

ABOUT THE AUTHOR

...view details