சென்னை: தமிழ்நாடு பிரீமியர் லீக் எனப்படும் டிஎன்பிஎல் டி20 தொடரின் ஐந்தாவது சீசன் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த திங்கள்கிழமை (ஜூலை 19) தொடங்கியது.
இந்நிலையில், இத்தொடரின் ஏழாவது லீக் ஆட்டத்தில் ஐ டிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியும், சேலம் ஸ்பார்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டியில், டாஸ் வென்ற சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி, திருப்பூர் தமிழன்ஸ் அணியை பந்துவீச அழைத்துள்ளது.
இன்றைய திருப்பூர் அணியில் சித்தார்த்துக்கு பதிலாக முகமது ஆஷிக் சேர்க்கப்பட்டுள்ளார். சேலம் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.