தமிழ்நாடு

tamil nadu

TNPL 2021: திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு 160 ரன்கள் இலக்கு

By

Published : Aug 1, 2021, 9:41 PM IST

திண்டுக்கல் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 159 ரன்களை எடுத்துள்ளது.

திண்டுக்கல் டிராகன்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ்
chennai vs Dindigul match

சென்னை: தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 தொடர் ஐந்தாவது சீசன் கடந்த ஜூலை 19ஆம் தேதி தொடங்கியது.

ஞாயிற்றுக்கிழமை என்பதால் இன்று (ஆக.1) இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதும் 19ஆவது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மாலை 7.30 மணிக்குத் தொடங்கி நடைபெற்றுவருகிறது.

இரவு போட்டி

இப்போட்டியில், டாஸ் வென்ற திண்டுக்கல் அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்நிலையில், முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்களை எடுத்துள்ளது. சென்னை அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் கௌசிக் காந்தி 45(31), நாராயணன் ஜெகதீசன் 40(27) ரன்கள் எடுத்தனர்.

திண்டுக்கல் பந்துவீச்சு தரப்பில் சிலம்பரசன் 2 விக்கெட்டையும், சுதேஷ், விக்னேஷ், மோகித் ஹரிஹரன் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

பிளேயிங் XI

சென்னை சூப்பர் கில்லீஸ்: கௌசிக் காந்தி (கே), நாராயணன் ஜெகதீசன், சுஜெய், உத்திரசாமி சசிதேவ், ராஜகோபால் சதீஷ், ஹரீஷ் குமார், ரவிஸ்ரீநிவாசன் சாய் கிஷார், சோனு யாதவ், மணிமாறன் சித்தார்த், ஜெகநாத் சீனிவாஸ், சந்தீப் வாரியர்

திண்டுக்கல் டிராகன்ஸ்: ஹரி நிஷாந்த் (கேப்டன்), எஸ்.அருண், ஆர்.எஸ்.மோகித் ஹரிஹரன், மணி பாரதி, ஆர் விவேக், லக்ஷமிநாராயணன் விக்னேஷ், ராஜாமணி ஸ்ரீநிவாசன், எம்.சிலம்பரசன், குர்ஜப்னீத் சிங், ரங்கராஜ் சுதேஷ், எஸ். சுவாமிநாதன்.

இதையும் படிங்க: வென்றார் சிந்து; இந்தியாவுக்கு இரண்டாவது பதக்கம்

ABOUT THE AUTHOR

...view details