சென்னை:தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 தொடர் ஐந்தாவது சீசன் கடந்த ஜூலை 19ஆம் தேதி தொடங்கியது. வார இறுதி என்பதால் இன்று (ஆக.1) இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. சேலம் ஸ்பார்டன்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதும் 18ஆவது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மாலை 3.30 மணிக்கு தொடங்கி நடைபெற்றுவருகிறது.
இப்போட்டியில், டாஸ் வென்ற திருச்சி அணி கேப்டன் ரஹில் ஷா பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்நிலையில், சேலம் அணி 5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 31 ரன்களை எடுத்து தொடர்ந்து விளையாடிவருகிறது.