சென்னை: தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 தொடர் ஐந்தாவது சீசன் கடந்த வாரம் தொடங்கியது. இத்தொடரின் 13ஆவது லீக் ஆட்டத்தில் சீசேம் மதுரை பாந்தர்ஸ், லைகா கோவை கிங்ஸ் அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடி வருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற மதுரை அணி பந்துவீச்சை தேர்வு செய்ததை அடுத்து, கோவை அணி பேட்டிங் செய்து வருகிறது. கோவை அணி 12 ஓவர்கள் முடிவில் 73/3 என்ற நிலையில் தொடர்ந்து விளையாடி வருகிறது.
இன்றைய லெவன்
மதுரை அணியில் எந்த மாற்றமும் செய்யப்படாத நிலையில், கோவை அணியில் இளங்கோவன் ஸ்ரீநிவாசன் நீக்கப்பட்டு திவாகர் பிளேயிங் லெவனில் இடம்பெற்றுள்ளார்.
லைகா கோவை கிங்ஸ்: கங்கா ஸ்ரீதர், சாய் சுதர்சன், அஸ்வின் வெங்கட்ராமன், சுரேஷ் குமார், ஷாருக்கான் (கே), அபிஷேக் தன்வர், செல்வ குமரன், முகிலேஷ், அஜித் ராம், கிருஷ்ணமூர்த்தி விக்னேஷ்,திவாகர்.
சீசெம் மதுரை பாந்தர்ஸ்: அருண் கார்த்திக், கே. ராஜ்குமார், பி. அனிருத் சிதாராம், என்.எஸ். சதுர்வேத் (கேப்டன்), ஜெகன்நாதன் கௌசிக், எம். ஷாஜகான், ஆர். மிதுன், ராமலிங்கம் ரோஹித், ஆர். சிலம்பரசன், கிரண் ஆகாஷ், ஆஷிக் ஸ்ரீநிவாஸ்.
இதையும் படிங்க:IND vs SL: நான்கு இந்திய வீரர்கள் அறிமுகம்; இலங்கை பந்துவீச்சு