தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

டி-20 தொடருக்கு பின் இர்ஃபான் பதானுக்கு கரோனா பாதிப்பு! - சாலை பாதுகாப்பு உலக டி20 தொடர்

அண்மையில் நடைபெற்று முடிந்த சர்வதேச சாலை பாதுகாப்பு டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியா லெஜெண்ட்ஸ் அணியில் விளையாடிய சச்சின் டெண்டுல்கர், யுசுஃப் பதான், சுப்ரமணிய பத்ரிநாத் ஆகியோரைத் தொடர்ந்து தற்போது இர்ஃபான் பதானுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

Irfan Pathan tests positive for COVID
இர்ஃபான் பதானுக்கு கரோனா பாதிப்பு

By

Published : Mar 30, 2021, 10:10 AM IST

டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்ஃபான் பதானுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில் தற்போது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக இர்ஃபான் பதான் தனது ட்விட்டரில், “எந்தவித அறிகுறியும் இல்லாத நிலையில், கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளேன். தற்போது என்னை நானே தனிமைப்படுத்திக்கொண்டு வீட்டில் உள்ளேன். அண்மையில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தயவுசெய்து கரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அதேபோல் அனைவரும் முகக்கவசம் அணிந்து, தகுந்த இடைவெளியை கடைபிடித்து, நல்ல உடல்நலத்துடன் வாழ வேண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பிசிசிஐ அதிகாரப்பூர்வ ஒப்புதல் இல்லாமல், ஒவ்வொரு கிரிக்கெட் அணியிலும் உள்ள ஓய்வு பெற்ற வீரர்கள் விளையாடும் தொடராக சர்வதேச சாலை பாதுகாப்பு டி20 கோப்பை தொடர் உள்ளது. இதனால் இத்தொடரில் விளையாடும் வீரர்களுக்கு என்ன மாதிரியான பயோ-பபுள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது.

அத்துடன் இந்தியா - இங்கிலாந்து இடையேயான தொடரில் கூட பார்வையாளர்கள் அனைத்து போட்டிகளிலும் பிசிசிஐ அனுமதிக்கவில்லை. மேலும், ஒரு சில போட்டிகளில் 50 சதவீதம் பார்வையாளர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கியது.

இந்தச் சூழ்நிலையில், சாலை பாதுகாப்பு டி20 தொடரில் 100 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டதுடன், அவர்கள் முறையாக முகக்கவசம் அணிந்தனரா என்பதையும் பெரிய அளவில் கண்காணிக்கவில்லை. இதன் காரணமாக இந்திய வீரர்கள் அடுத்தடுத்து கரோனா பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

இதையும் படிங்க: கர்நாடக உசேன் போல்ட் ஸ்ரீநிவாஸ் கவுடா புதிய சாதனை!

ABOUT THE AUTHOR

...view details