கொழும்பு (இலங்கை):இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 164 ரன்களைச் சேர்த்தது. அதில், அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 50, ஷிகார் தவான் 46 ரன்களை எடுத்தனர். இலங்கை தரப்பில் ஹசரங்கா, சமீரா ஆகியோர் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
தொடர் விக்கெட்டுகள்
இதன்படி, 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய இலங்கை அணிக்கு, முதலில் இருந்தே சீரான இடைவெளியில் விக்கெட்கள் விழ ஆரம்பித்தது. மினோத் பானுகா 10(7) ரன்களுக்கும், டி சில்வா 9(10) ரன்களுக்கும், அவிஷ்கா 26(23) ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
அசலங்கா அதிரடி
நான்காம் விக்கெட்டுக்கு பாண்டாராவுடன் ஜோடி சேர்ந்தார் அசலங்கா. பாண்டாரா பணிவாக விளையாட, அசலங்கா அதிரடி காட்ட ஆரம்பித்தார். 40 ரன்கள் சேர்த்த இந்த பாட்னர்ஷிப்பை ஹர்திக் பாண்டியா உடைத்தார். பாண்டாரா 9(19) ரன்களில் வெளியேற, அவரை தொடர்ந்து அசலாங்காவும் 44(26) ரன்களில் தனது விக்கெட்டை தீபக் சஹாரிடம் இழந்தார்.
அதன்பின் ஹசரங்கா ரன் ஏதும் இன்றியும், கருணாரத்ன 3(4) ரன்களிலும் முறையே தீபக் சஹார், புவனேஷ்வர் குமார் ஆகியோரிடம் போல்டாகி வெளியேறினர்.