தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

IND vs AUS: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்கான அணியில் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் இடம்பெற்றுள்ளனர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு

By

Published : Jan 14, 2023, 10:31 AM IST

மும்பை:ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி இலங்கை அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரை கைப்பற்றிய நிலையில் நாளை (ஜனவரி 15) மூன்றாவது ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் நடக்கவுள்ளது. இந்த தொடருக்குப் பின் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 4 டெஸ்ட் போட்டிகளிலும், மூன்று டி20 தொடரிலும் விளையாட உள்ளது.

டெஸ்ட் தொடரின் முதலவாது போட்டி வரும் ஜனவரி 18ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்குகிறது. டி20 போட்டி ஜனவரி 27ஆம் தேதி ஜார்க்கண்ட் மாநிலத்தில் தொடங்குகிறது. இந்த போட்டிகளில் பங்கேற்க உள்ள இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. டெஸ்ட் அணியில் சூர்யகுமார் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல விக்கெட் கீப்பரும் சிறந்த பேட்டருமான இஷான் கிஷானுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதேபோல, முழங்கால் அறுவை சிகிச்சை காரணமாக இருக்கும் ரவீந்திர ஜடேஜா டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், அஸ்ஸாமுக்கு எதிரான ரஞ்சி டிராபி போட்டியில் 379 ரன்கள் குவித்த கவனம் பெற்ற பிருத்வி ஷா, நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இடம்பெற்றுள்ளார். நியூசிலாந்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில் கே.எல்.ராகுலுக்கு பதிலாக கே.எஸ்.பரத் சேர்க்கப்பட்டார். முழங்கால் அறுவை சிகிச்சை ஓய்வில் இருந்த ரவீந்திர ஜடேஜா டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு டெஸ்ட் போட்டிகளுக்கான அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), ஷுப்மன் கில், சேட்டேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எஸ்.பாரத் (கீப்பர்), இஷான் கிஷன் (கீப்பர்), ஆர். அஷ்வின் , அக்சர் படேல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது. ஷமி, முகமது. சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனட்கட், சூர்யகுமார் யாதவ்.

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் அணி:ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், இஷான் கிஷான் (கீப்பர்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், கே.எஸ். பாரத் (கீப்பர்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாக்கூர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், முகமது. ஷமி, முகமது. சிராஜ், உம்ரான் மாலிக்.

நியூசிலாந்துக்கு எதிரான டி20 அணி: ஹர்திக் பாண்டியா (கேப்டன்), சூர்யகுமார் யாதவ் (துணை கேப்டன்), இஷான் கிஷன் (வாரம்), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மான் கில், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, ஜிதேஷ் சர்மா (கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், சிவம் மாவி, பிரித்வி ஷா, முகேஷ் குமார்.

இதையும் படிங்க:ஸ்பெயினை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா முதல் வெற்றி

ABOUT THE AUTHOR

...view details