தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

வெளியான சுரேஷ் ரெய்னாவின் 'பிலீவ்' புத்தகம்! - சுரேஷ் ரெய்னா

கிரிக்கெட் வாழ்க்கையின் அனுபவங்களைக் கொண்டு சுரேஷ் ரெய்னா எழுதிய சுயசரிதை புத்தகம் விற்பனைக்கு வந்துள்ளது.

Suresh Raina
சுரேஷ் ரெய்னா

By

Published : Jun 15, 2021, 11:48 AM IST

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக வலம்வந்தவர் சுரேஷ் ரெய்னா. 34 வயதான இவர், கடந்தாண்டு சர்வதேச போட்டிகளிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார். இருப்பினும், ரசிகர்களால் சின்ன தல எனச் செல்லமாக அழைக்கப்படும் இவர், ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிவருகிறார்.

இந்நிலையில், சுரேஷ் ரெய்னா எழுதிய, பிலீவ் (Beleive) என்கிற சுயசரிதை புத்தகம் நேற்று (ஜூன் 14) வெளியாகியுள்ளது.

வெளியான சுரேஷ் ரெய்னாவின் 'பிலீவ்' புத்தகம்

அந்தப் புத்தகத்தில், சுரேஷ் ரெய்னாவின் கிரிக்கெட் பயணம் குறித்த தகவல்களும், தனிப்பட்ட வாழ்வில் நடைபெற்ற சுவாரஸ்ய நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளன.

பாரத் சுந்தரேசன் என்பவரோடு இணைந்து எழுதியுள்ள இந்தப் புத்தகம், முன்னணி புத்தகக் கடைகள் மட்டுமின்றி அமேசான், பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.

இதையும் படிங்க:'அர்ஜென்டினாவுக்கு கோப்பை பெற்று தருவதே எனது பெருங்கனவு' லியோனல் மெஸ்ஸி

ABOUT THE AUTHOR

...view details