பெங்களூரு :13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, நெதர்லாந்து மற்றும் வங்கதேசம் ஆகிய 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
லீக் சுற்று ஆட்டங்கள் இறுதி கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், அரையிறுதி வாய்ப்பில் நீடிக்க அணிகள் போராடி வருகின்றன. இதுவரை இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மட்டும் அரைஇறுதிக்கு தகுதி பெற்று இருந்த நிலையில் கடந்த நவம்பர் 7ஆம் தேதி மும்பையில் நடந்த லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 3வது அணியாக ஆஸ்திரேலியாவும் அரைஇறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
அரைஇறுதி சுற்றுக்குள் நுழையும் 4வது அணியை தேர்வு செய்யும் ஆட்டமாக இன்று (நவ. 9) பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் நியூசிலாந்து, இலங்கை அணிகள் இடையிலான ஆட்டம் காணப்படுகிறது. இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெறும் நிலையில், புள்ளிப் பட்டியலில் 4வது இடத்தை பிடிக்கும்.
அதேநேரம் இலங்கை அணியை பெரிய ரன் அல்லது விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தினால் மட்டுமே நெட் ரன் ரேட் அடிப்படையில் நியூசிலாந்து அணியால் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும். டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.