தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

உலக கோப்பை டி20: இலங்கை அணி அறிவிப்பு - இலங்கை அணி அறிவிப்பு

ஆஸ்திரேலியாவில் நடக்கவிருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க உள்ள இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணி அறிவிப்பு
இலங்கை அணி அறிவிப்பு

By

Published : Sep 16, 2022, 7:37 PM IST

கொழும்பு: உலக கோப்பை டி20 தொடர் அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்க தேசம், இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, நமீபியா, ஸ்காட்லாந்து, இலங்கை, மேற்கிந்திய தீவுகள், அயர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நெதர்லாந்து, ஜிம்பாப்வே என மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன.

இந்த தொடருக்கான வீரர்களின் பட்டியலை பல்வேறு அணிகள் அறிவித்துவருகின்றன. இந்தியா, பாகிஸ்தான் அணிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டன. அதைத்தொடர்ந்து இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணி: தசுன் ஷனக (கேப்டன்), தனுஷ்க குணதிலக்க, பதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், சரித் அசலங்கா, பானுக ராஜபக்ச, தனஞ்சய டி சில்வா, வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷனா, ஜெப்ரி வான்டர்சே, சாமிக்கா கருணாரத்னே, லஹிரு குமார (உடற்தகுதிக்கு உட்பட்டவர்), டில்ஷான் மதுஷங்க, பிரமோத் மதுஷன்.

காத்திருப்பு வீரர்கள்: அஷேன் பண்டார, பிரவீன் ஜெயவிக்ரம, தினேஷ் சந்திமால், பினுர பெர்னாண்டோ, நுவனிடு பெர்னாண்டோ.

இதையும் படிங்க:ஓய்வை அறிவித்த டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர்

ABOUT THE AUTHOR

...view details