தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

சிராஜ் பந்துவீச்சில் சிதறிய தென் ஆப்பிரிக்கா அணி - 55 ரன்களுக்கு ஆல் அவுட்! - mohammed siraj

IND Vs SA Test: இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி, 55 ரன்களில் சுருண்டது.

india tour of southafrica
ind vs sa test

By PTI

Published : Jan 3, 2024, 5:00 PM IST

கேப் டவுன்:தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, தற்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி, கடந்த ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி நடைபெற்றது.

இதில் தென் ஆப்பிரிக்கா அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இதனால் தொடரில் 1-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்க அணி முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது போட்டி கேப் டவுன் நியூலேன்ட்ஸ் மைதானத்தில் இன்று (ஜன.03) தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி கேப்டன் டீன் எல்கர், பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணியில் அஸ்வின் மற்றும் ஷர்துல் தாகூர் நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக ஜடேஜா மற்றும் முகேஷ் குமார் சேர்க்கப்பட்டனர். அதன்படி, முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி, இந்திய பந்து வீச்சாளர்களைச் சமாளிக்க முடியாமல் திணறியது.

தென் ஆப்பிரிக்கா அணியில் கேப்டன் டீன் எல்கர் - எய்டன் மார்க்ரம் ஜோடி தொடக்க வீரர்களாக களமிறங்கிய நிலையில், 2 ரன்கள் எடுத்த எய்டன் மார்க்ரம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். மற்றொரு தொடக்க வீரரான டீன் எல்கர், சிராஜ் பந்துவீச்சில் சிக்கி 4 ரன்னில் அவுட் ஆனார்.

பின்னர் ஜோடி அமைத்த டோனி டி ஸோர்ஸி - டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஜோடியில், டோனி 2 ரன்னுக்கும், டிரிஸ்டன் 3 ரன்னுக்கும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனையடுத்து களமிறங்கிய அனைத்து பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

முதல் 13 ஓவருக்குள் டாப் ஆடரை பறிகொடுத்த தென் ஆப்பிரிக்க அணி, மிடில் ஆடரும் காலி செய்யப்பட்டதால் ரன் சேர்க்க முடியாமல் தத்தளித்தது. லோ-ஆடரில் வந்த வீரர்களின் விக்கெட்டை முகேஷ் குமாரும், பும்ராவும் மாறி மாறி வீழ்த்த, தென் ஆப்பிரிக்காவின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.

அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்த அந்த அணி, 23.2 ஓவர்களில் 55 ரன்கள் மட்டுமே எடுத்தது. பந்துவீச்சில் மிரட்டி எடுத்த இந்திய அணி தரப்பில் சிராஜ் 6 விக்கெட்டுகளையும், பும்ரா மற்றும் முகேஷ் குமார் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதையும் படிங்க:விளையாட்டு ஆர்வலர்களுக்கு விருந்து படைக்க காத்திருக்கும் 2024... போட்டிகள் அட்டவணை!

ABOUT THE AUTHOR

...view details