துபாய்:ஐசிசி டி20 தரவரிசை பட்டியல் நேற்று(மார்ச்.2) வெளியிடப்பட்டது. இந்தியா-இலங்கை டி20 தொடர் தரவரிசையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. ஒருபுறம் இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் இலங்கைக்கு எதிராக மூன்று போட்டிகளிலும் மூன்று அரை சதங்களை அடித்து பேட்டிங் பிரிவில் 18ஆவது இடத்திற்கு முன்னேறினார்.
ஐசிசி டி20 தரவரிசை: இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் முன்னேற்றம் - ஐசிசி டி20 தரவரிசையில் கோலி
இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் அபாரமாக விளையாடிய இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் ஐசிசி டி20 தரவரிசையில் 18ஆவது இடத்தை பிடித்தார்.
மறுபுறம் விராட் கோலி ஓய்வு காரணமாக முதல் 10 இடங்களில் இருந்து முதல்முறையாக வெளியேறி 15ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டார். பந்துவீச்சாளர் தரவரிசையில் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் மூன்று இடங்கள் முன்னேறி 17ஆவது இடத்தைப் பிடித்தார். இதையடுத்து ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலிடத்தில் உள்ளார். விராட் கோலி இரண்டாவது இடத்திலும், ரோஹித் சர்மா மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
இதையும் படிங்க:உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்... இந்திய வீரர் சவுரப் சவுத்ரி தங்கம் வென்று அசத்தல்...